சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களைப்பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்த அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போ இல்லை என்றால் எதுவுமே இல்லை என்ற வசனமும் எழுதப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்பதில் அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.