சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது.
சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது.இது குறித்து முன்னாள் வீரர்கள் , ரசிகர்கள் பலர் இந்திய அணிக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ,”கடந்த 4 முதல் 5 வருடங்களில் இந்திய அணி டி20 போட்டிகளில் மோசமாக செயல்பட்டது உலக கோப்பை டி20 போட்டியில் தான் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். கடந்த 2017, 2019 ஆண்டுகளில் அதாவது சாம்பியன்ஸ் டிராபி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது.
ஆனால் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது .நான் கடந்த 4 , 5 ஆண்டுகளில் பார்த்தவரை இந்திய அணியின் மோசமான ஆட்டம் இதுதான் என நினைக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது .ஆனால் இந்திய அணி வீரர்கள் போதுமான சுதந்திரத்துடன் இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடவில்லை என நினைக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.