Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் வீரர்களுக்கு தொற்று பரவியது எப்படி ..? பிசிசிஐ தலைவர்  கங்குலி பதில் …!!!

ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ,ஏற்பட்டதைப் பற்றி பிசிசிஐ தலைவரான  கங்குலி கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த வருடம் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கம், இன்றளவும் குறையாமல் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில்  இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியை ,இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. எனவே திட்டமிட்ட படி கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் , ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்தது. 8 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தனர். தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் 2 நாட்களுக்கு முன்  கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த, 2 பந்துவீச்சாளர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , அன்று நடக்கவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. எதிர்பாராதவிதமாக மறுநாள் ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. எனவே  52 நாட்களுக்குள்  60 போட்டிகளை நடக்க திட்டமிடப்பட்ட நிலையில் , 24 நாட்களில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன . இந்த நிலையில் பிசிசிஐ-யின் தலைவராக கங்குலி ,ஆங்கில ஊடகத்திற்கு  அளித்த பேட்டிக்கு விளக்கம் அளித்துள்ளார் .

அதில் ,இந்த வருட ஐபிஎல் போட்டியை , இந்தியாவில் நடத்த முயற்சி செய்தது தவறு அல்ல.அப்போது நாங்கள் இந்த முடிவை எடுத்தபோது , இந்தியாவில் கொரோனா  தொற்று எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டதால், இந்த வருடத்திற்கான போட்டியை இந்தியாவில் நடத்த  திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த மூன்று வாரத்தில் தொற்றின்  தாக்கம் அதிகரித்துவிட்டது. அதோடு பாதுகாப்பு வளையத்தில் இருந்த, வீரர்களுக்கும் தொற்று பரவியது. எனவே இந்நிலையில் வீரர்களுக்கு எப்படி தொற்று பரவியது, என்று கூறுவது கடினமான ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |