14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எந்த தடையுமின்றி ,சிறப்பாக போட்டிகள் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான கங்குலி உறுதி அளித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி தொடர் வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் போட்டியானது ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டிகள் சென்னை ,டெல்லி, மும்பை ,கொல்கத்தா, பெங்களூர் ,அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. 9ம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. ஆனால் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்ற 3 கிரிக்கெட் வீரர்களுக்கும், மும்பை மைதானத்தில் பணியாற்றிய 10 ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன .
இதனால் மற்ற வீரர்களுக்கு தொற்று ஏற்படுமோ, என்ற அச்சம் காணப்படுகிறது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி கூறியபோது, தற்போது பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகளுக்கு தடை ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடியே ஐபிஎல் போட்டிகள் ,குறிப்பிட்ட தேதிகளில் கட்டாயம் நடைபெறும் என்று அவர் உறுதியளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.அதே சமயத்தில் கொரோனா தொற்றிலிருந்து வீரர்களை பாதுகாக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவது ,தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.