கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிக்கு சிக்கல் ஏற்படுமா , என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த 2021 சீசனின் ஐபிஎல் போட்டி ,கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களின் இல்லாமல், கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் சென்னை ,மும்பை ,டெல்லி ,அகமதாபாத் போன்ற நகரங்களில் நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று நடக்கவிருந்த 30 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத இருந்தன. ஆனால் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள, பந்துவீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரும் ,முன்னாள் வீரருமான எல். பாலாஜி மற்றும் அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால் கொல்கத்தா அணி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் , பயிற்சியாளர்கள் அனைவரும் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ,ஒரே மைதானத்தில் நடத்துவதைப் பற்றி பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மும்பையில் 3 மைதானங்கள் இருப்பதால், மீதமுள்ள போட்டிகளை மும்பையில் நடத்துவதற்கு , பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது .