Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-லில் விராட் கோலி : இதுவரை சாதித்தது என்ன….?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான 32 வயதான விராட் கோலிக்கு ஐபிஎல் தொடர் தொடங்கியபோது 19 வயது தான். அப்போது அவர் அவ்வளவு பிரபலம் இல்லை .ஆனால் முதல் போட்டியிலேயே இவர்  பெங்களூர் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அப்போது இளம் வீரராக இருந்த விராட் கோலியை  பெங்களூர் அணி சுமார் 22 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் பெங்களூர் அணியின் நம்பிக்கை வீண் போகவில்லை .அந்த சீசன் மட்டுமல்லாது தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் அவர் தனது அதிரடி ஆட்டத்தால் மிகவும் பிரபலமானார் . குறிப்பாக 2010-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

அதன் பயனாக 2011ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் நடந்த அணி தேர்வில் பெங்களூர் அணி விராட் கோலியை  மட்டும் தக்க வைத்துக் கொண்டது. அதோடு அப்போது கேப்டனாக இருந்த டேனியல்      வெட்டோரி-  க்கு பலம் சேர்க்க அணியின் துணை கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அப்போது அந்த சீசனில் அதிக ரன் குவித்த அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல்க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்த விராட் கோலி 557 ரன்களை குவித்தார். இதன் பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் கேப்டன் பதவியில் இருந்து டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு கேப்டனாக தொடர்ந்துவந்த விராட் கோலி 2019 சீசனில் 973 ரன்கள் குவித்து புதிய சரித்திரம் படைத்தார்.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடித்த 5 சதங்களில் நான்கு  சதம் 2016 சீசனில் விளாசியதாகும். இதையடுத்து 2017ஆம் சீசனில் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்ட விராட் கோலி தொடக்கத்தில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அதற்கு அடுத்து சீசனில் அதிகபட்ச தொகைக்கு சுமார் 17 கோடி ரூபாய் பெங்களூர் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. அணியை வழிநடத்துவது மட்டுமல்லாமல் தொடர்ந்து பேட்டிங்கிலும் ஜொலித்து வரும் விராட் கோலி இன்று  200-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். ஆனால் ஆர்சிபி அணிக்காக கோப்பையை பெற்றுத் தர முடியவில்லை என்ற ஆதங்கம் மட்டும் அவரிடம் உள்ளது .அதற்கு இந்த தொடரில் பதில் கிடைக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.

Categories

Tech |