Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல் இறுதிப் போட்டி : சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றம்!!!

சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதி போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.  

இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின்  12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு கடுமையாக போட்டி போடுகின்றது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த குவாலிஃபையர்  சுற்றில் முதல் இரண்டு அணிகளுக்கு இடையே  நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். மூன்றாம் மற்றும் நான்காம் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணி குவாலிஃபையர் முதல்   சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் .

Image result for Chennai Chepauk Ground

இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த மைதானத்தில் ஐ,ஜே,கே என 3 கேலரிகளுக்கு  மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்துவிட்டது.  இந்த 3 கேலரிகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இருக்க முடியுமென்பதால் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டும் இடம் கொடுக்கவில்லை. இதனையடுத்து இட வசதி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நடப்பு ஐ.பி.எல் தொடரின்  இறுதிப்போட்டி மாற்றப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக  முதல் தகுதி சுற்றுப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், இரண்டாவது தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று  விசாகபட்டினத்திலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |