ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த 14வது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி 4-வது முறையாக கைப்பற்றியது. இதையடுத்து தோனி விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தோனி நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் அணியில் தக்க வைக்கப் படுவது மட்டுமின்றி கேப்டனாகவும் நீடிப்பார் என ஏற்கனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படும் 4 வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்றது.
அவ்வகையில் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படும் நான்கு வீரர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 2022 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் தோனி, ருத்ராஜ் கெய்க் வாட், ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகியோர் தங்க வைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தோனி அடுத்த மூன்று ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் ஆடுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் டுப்ளஸிஸ், பிராவோ உள்ளிட்ட சில வீரர்களை ஏலத்தில் விட்டு மீண்டும் அணியில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.