Categories
கிரிக்கெட் சற்றுமுன் தேசிய செய்திகள் விளையாட்டு

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் கிரிக்கெட் ? ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கக்குமா ? என்ற கேள்வி எழுந்தது. காரணம் மக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தி வந்தது.இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நிறுத்துவது தொடர்பாக கோரிக்கையை பரிசீலனை செய்து வருகின்றோம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கும் விசாவை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஏப்ரல் 15 வரை தடை ஏற்பட்ட நிலையில்பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்கம் ஐபிஎல் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

 

 

Categories

Tech |