Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “லக்னோ வலுவான அணியை உருவாக்கும்”…. கடுமையாக நடந்த போட்டி…. கருத்து தெரிவித்த நெட்டிசன்கள்…!!

ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்களை கண்ட நெட்டிசன்கள் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளார்கள்.

ஐபிஎல் தொடருக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புதிதாக வந்துள்ளது. இதோடு சேர்த்து மொத்தமாக 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் மற்ற அணிகளுக்கு மிகவும் கடுமையான போட்டியாக இருந்துள்ளது. அதன்படி லக்னோ அணி ஹைதராபாத் அணியுடன் போட்டி போட்டு ஜேசன் ஹோல்டரை ஏலத்தில் வாங்கியுள்ளது.

அது மட்டுமின்றி மும்பை அணியுடன் மிக கடுமையாக போட்டி போட்டு குயிண்டனையும் ஏலத்தில் எடுத்துள்ளது. அதைப்போல் பல முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுத்த லக்னோவை நெட்டிசன்கள் இது ஒரு வலுவான அணியை உருவாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்கள்.

Categories

Tech |