Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ராஜஸ்தான் அணிக்கு வந்த சோதனை …. தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மீதமுள்ள  ஐபிஎல் தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார் .

14 வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் மீதமுள்ள  ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதற்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய நட்சத்திர வீரர்கள் விலகிய நிலையில் தற்போது பட்லரும் விலகியுள்ளார் .

அவருடைய மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் அருகிலிருந்து  கவனிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஜோஸ் பட்லருக்கு பதிலாக 24 வயதான நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

Categories

Tech |