Categories
அரசியல்

IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் விலை போகாத 5 வீரர்கள்…. யாரெல்லாம் தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க….!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 16-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு கடந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றதால், இந்த வருடம் வருகிற 23-ஆம் தேதி கொச்சியில் வைத்து மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 991 வீரர்கள் விண்ணப்பித்தனர். இதில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் விலை போக வாய்ப்பு இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி இலங்கை அணியை சேர்ந்த ஆஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறந்தவர். இவர் கடந்த 2009 முதல் 2017-ம் ஆண்டு வரை ஐபிஎல்லில் விளையாடினார். ஆனால் கடந்த சில வருடங்களாக மேத்யூஸ் ஐபிஎல் போட்டிகளில் விளையாடதோடு, கடந்த 2 வருடங்களாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிடும் விளையாடவில்லை. இதன் காரணமாகத்தான் சுமார் 2 கோடி ரூபாயை அடிப்படை விலையாக கொண்ட மேத்யூசை ஐபிஎல்லில் யாரும் ஏலத்திற்கு எடுக்க மாட்டார்கள். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான ஷேய் ஹாப் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்.

ஆனால் இதுவரை ஒரு ஐபிஎல் போட்டிகளில் கூட இவரை ஏலத்திற்கு எடுக்கவில்லை. ஏனெனில் இவர் போட்டிகளில் நிதானமாக விளையாடுவார் என்பதால் ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை. இதனையடுத்து நியூசிலாந்து வீரர் டாம் லேதம் சுமார் 10 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில், இதுவரை ஒரு ஐபிஎல் போட்டிகளில் கூட விளையாடவில்லை. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தன்னுடைய பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த நிலையில் இதுவரை ஒரு முறை கூட இவரை யாரும்  ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அதன் பிறகு இங்கிலாந்து வீரர் கிரைக் ஓவர்டன் சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 15 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. இவர் சுமார் 2 கோடி மதிப்பில் தன்னுடைய பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இதுவரை ஏலத்தில் எடுக்க யாருமே முன்வரவில்லை. மேலும் ஆஸ்திரேலிய வீரர் டார்ஷி ஷார்ட் சுமார் 75 லட்சம் பிரிவில் தன்னுடைய பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடி நிலையில், பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. இதன் காரணமாகத்தான் இவரையும் யாரும் ஏலத்தில் எடுப்பதற்கு முன்வரவில்லை.

Categories

Tech |