ஐபிஎல் 2022-ம் ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
14வது ஐபிஎல் சீசன் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் ரசிகர்களிடையே போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு பிற வீரர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் நட்சத்திர வீரர்களை எந்தெந்த அணி ஒப்பந்தம் செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது .இந்த நிலையில் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் அக்டோபர் 15-ஆம் தேதி முடிவடையும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் ஐபிஎல் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.