Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடபோகும் முக்கிய வீரர் …! வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்…!!!

15-வது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கப்போகும் வீரர்கள் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது.

2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன்படி நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அணியில் எத்தனை வீரர்களை தக்க வைக்கமுடியும் என்ற குழப்பம் நீடித்து வந்தது . இதனிடையே தற்போது வெளியாகிய தகவலின் படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய வீரர் 2 மற்றும் அயல்நாட்டு வீரர் 2 என தக்க வைக்கலாம்,இல்லையெனில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல் நாட்டு வீரர் என தக்க வைக்கலாம் .இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்கப்போகும் அணி வீரர்களின் தகவல் வெளியாகியுள்ளது .இதுகுறித்து ஐபிஎல் அதிகாரி ஒருவர் கூறும்போது,” மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, கீரன் போலார்ட், பும்ரா ஆகியோர்  அணியில் தேர்வாகி உள்ளனர் .அடுத்ததாக 4 -வது வீரராக சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் இருவரில் ஒரு வீரரை  தக்க வைக்கலாம்” என தெரிவித்துள்ளார் .ஆனால் இந்த பட்டியலில் மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. ஏனெனில் தற்போது அவருடைய பார்ம் மோசமான நிலையில் உள்ளது. அதோடு சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும் அவர் பவுலிங் செய்யவில்லை . அதேபோல் பேட்டிங்கிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |