Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : எந்தெந்த அணியில் யார் யார் ….? வீரர்களின் முழு லிஸ்ட் இதோ …..!!!

 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள  வீரர்களின் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே அடுத்த சீசனுக்கு ஐபிஎல் ஏலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதனால் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் அணிகள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்:

மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்ப்ரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), பொல்லார்டு (6 கோடி).

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம் எஸ் தோனி (12 கோடி), ரவீந்திர ஜடேஜா (16 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி), மொயின் அலி (8 கோடி).

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல்(11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி).

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரிஷப் பந்த் (16 கோடி), பிரித்வி ஷா (7.5 கோடி), அண்ட்ரிச் நோர்ட்ஜே (6.5 கோடி), அக்ஸர் படேல் (9 கோடி).

ராஜஸ்தான் ராயல்ஸ் : சஞ்சு சாம்சன்(14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி).

பஞ்சாப் கிங்ஸ் : மயன்க் அகர்வால் (12 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கேன் வில்லியம்சன்(14 கோடி) , அப்துல் சமாத் (4 கோடி), உம்ரான் மாலிக்(4 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : சுனில் நரைன்( 6 கோடி), ஆண்ட்ரே ரஸ்ஸல் (12 கோடி), வருண் சக்கரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி)

 

Categories

Tech |