Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : 2 புதிய அணிகளை வாங்கப்போவது யார் ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

15-வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடைபெறுகிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவதை இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .அதோடு வர்த்தக ரீதியாகவும் ஐபிஎல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன .இதனால் வருகின்ற 15-வது ஐபிஎல் சீசன் தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது.

இதனிடையே இந்த புதிய இரு அணிகளுக்கான ஏலம்  நடைபெறுகிறது. அதோடு ஒவ்வொரு அணியின் ஆரம்ப விலை ரூபாய் 2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெற உள்ள இந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில்அதானி குழுமம் ,கால்பந்து கிளப் ஆன மான்செஸ்டர் யுனைடெட் நிறுவனம் பாலிவுட் நட்சத்திர ஜோடி தீபிகா படுகோன் ரன்வீர் சிங் உட்பட 22 நிறுவனங்கள் இந்தப் புதிய அணிகளை வாங்க ஆர்வமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து  அகமதாபாத் ,கட்டாக், தர்மசாலா ,இந்தூர் ,லக்னோ மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களை மையமாக கொண்டு இந்த புதிய அணிகளின் ஏலம் இருக்கும்.அதோடு ஒரு நிறுவனம் எத்தனை பெயர்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதனிடையே அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு நகரங்களை மையமாகக் கொண்டே ஐபிஎல் புதிய அணிகள் அமைய வாய்ப்பு உள்ளது .இதையடுத்து இந்த புதிய இரண்டு அணிகள் எவை ? யார் வாங்கி உள்ளார் என்ற விவரத்தை பிசிசிஐ நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பிசிசிஐக்கு ரூபாய் 7000 கோடி வருவாய் கிடைக்கும் என கருதப்படுகிறது.

Categories

Tech |