IPL கிரிக்கெட்டில் 7ஆம் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இவர்களில் டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 210 ரன்கள் அடித்து குவித்தது. இதனை லக்னோ அணியானது 19.2 ஓவரில் இலக்கினை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இருஅணிகளுக்கும் இடையில் நடந்த போட்டியில் வீரர்கள் படைத்த சாதனைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான தகவலை காண்போம். IPL வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனையை படைத்து இருக்கிறது. சென்னை இதுவரையிலும் நடந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததே இல்லை.
ஆனால் இந்த சீசனில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்ததை தொடர்ந்து சென்னை அணி மோசமான சாதனையை படைத்து உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் எம்.எஸ் டோனி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் 15-வது ரன்னை எடுத்தபோது அனைத்து வடிவிலான 20 ஓவர் போட்டிகளிலும் சேர்த்து 7,000 ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்து சாதனை படைத்த 6-வது இந்திய வீரர் டோனி ஆவார். விராட் கோலி (10,326 ரன்), ரோகித் சர்மா (9,936 ரன்), ஷிகர் தவான் (8,818 ரன்), ரெய்னா (8,654 ரன்), உத்தப்பா (7,120 ரன்) போன்றோருடன் டோனி இணைந்தார். டோனி 349 ஆட்டங்களில் 7,001 ரன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் சென்னை அணி வீரர் பிராவோ மிகப்பெரிய மைக்கல்லை எட்டியுள்ளார். IPL தொடரில் அதிகமான விக்கெட்டுகள் எடுத்த மலிங்காவை பின்னுக்குதள்ளி முதல் இடத்தை பிராவோ பிடித்துள்ளார். முதல் 5 இடத்தை பிடித்த வீரர்களில் முதல் இடத்தில் பிராவோ 171 விக்கெட்டுகள், 2ஆம் இடத்தில் மலிங்கா 170 விக்கெட்டுகள், 3ஆம் இடத்தில் அமித் மிஸ்ரா 166 விக்கெட்டுகள், 4ஆம் இடத்தில் பியூஸ் சாவ்லா 157 விக்கெட்டுகள், ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். இதனிடையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது. சென்னை அணி தவறவிட்ட கேட்சுகளால் சென்னை அணி தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் 19-வது ஓவரில் சிவம் துபே 25 ரன்கள் விட்டுக்கொடுத்ததாலும் லக்னோ அணி எளிதாக வெற்றியடைந்தது.
இதற்கிடையில் என்ன தான் தோல்வி தழுவினாலும் சென்னை அணியினர் 2 பேர் சாதனை படைத்துள்ளது ஆறுதலாக இருக்கிறது. லக்னோ அணி வீரரான லீவிஸ் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். அவர் 23 பந்துகளில் அரை சதம் கடந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சீசனில் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை லீவிஸ் பெறுகிறார். லக்னோ அணியின் இளம்வீரரை அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் குட்டி ஏபிடி என்று புகழாரம் சூட்டி இருந்தார். அதேபோன்று பதோனியின் ஆட்டம் இருந்தது. இக்கட்டான நிலையில் குர்ணால் பாண்ட்யாவுக்கு பதில் களமிறங்கிய பதோனி சிறப்பான ஆட்டத்தை விளையாடினார்.
அவர் லீவிஸ் உடன் இணைந்து ஆட்டத்தை முடித்து அணிக்கு வெற்றி தேடிதந்தார். இதற்கிடையில் போட்டியின்போது பதோனி அடித்த ஒரு சிக்சர் சென்னை அணியின் ரசிகை ஒருவரின் தலையை பதம் பார்த்தது. சிக்சருக்கு வந்த பந்தை அந்த ரசிகை கேட்ச் பிடிக்க முயற்சி செய்யும் போது அவரது கையில் பட்டு தலையில் விழுந்தது. ஆனால் அந்த ரசிகைக்கு பெரியளவில் காயம் ஏற்படவில்லை. போட்டி முடிந்த பின் டோனி மற்றும் கம்பீர் பேசிக் கொண்டிருப்பது போன்று எடுக்கப்பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அவர்களுக்கு இடையில் ஒரு மோதல் இருப்பது போன்று அனைவராலும் பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இந்த புகைப்படம் வைரலானது. டோனி தொடரப்பட கம்பீர் அதிகாமவே கருத்து தெரிவித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. உள்ளூர் போட்டியின்போது டோனி அணி வெற்றியடையும். அனைவரும் எதிரணிக்கு கை குலுக்குவது வழக்கம் ஆகும். இந்நிலையில் டோனி வரும் போது அடஹி கண்டுக்காமல் கம்பீர் செல்லும் இந்த வீடியோவும் அதிகாமவே வைரலாகியது.