Categories
விளையாட்டு

IPL 2022: ‘கிளென் மேக்ஸ்வெல்’…. ஐபிஎலில் பங்கேற்பதில் புது சிக்கல்…. வெளியான முக்கிய விபரம்….!!!

ஐபிஎல் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்பது தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளது.

உலகின் தலை சிறந்த வீரராக திகழ்ந்து வரும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 11 கோடிக்கு தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் இவருக்கும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினி ராமனுக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்பின் கொரோனா ஊரடங்கு போன்ற எதிர்பார்க்காத நெருக்கடியால் இவர்களது திருமணம் தள்ளிப்போனது. இதனை அடுத்து வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் போட்டிகளில் மேக்ஸ்வெல் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. இதனை பற்றி பேசியுள்ள அவர், முதலில் நடந்த திருமண ஏற்பாட்டின் போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இரண்டு வாரங்கள் கால இடைவெளி இருந்தது. இதனையடுத்து எந்த தொடரையும் தவற விடப் போவதில்லை என மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் திருமண தேதியில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் தொடர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கான சிக்கல் எழுந்துள்ளது என தெரிவித்தார்.

Categories

Tech |