IPL கிரிக்கெட்டில் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி கொண்டது. அப்போது முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 180 ரன்கள் அடித்து குவித்தது. இதனையடுத்து விளையாடிய சென்னைஅணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து குவித்ததால் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. சென்னை அணியினர் தொடர்ந்து 3போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். இப்போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி ராஜபக்சேவை ரன்அவுட் செய்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 2வது ஓவரில் இந்த ரன்அவுட் செய்யப்பட்டது. இதில் 2வது ஓவரை ஜோர்டன் வீசினார்.
முதல்பந்தை சிக்சர் அடித்த ராஜபக்ச 2வது பந்தை 1 ரன் எடுக்க முயற்சி செய்தார். அப்போது முதலாவதாக தவான் ஓடி வந்தார். பின் ஜோர்டன் வருவதை பார்த்து அவர் பின்னாடி சென்று விட்டார். தவான் அழைத்தவுடன் ராஜபக்ச பாதிவரை வந்து பிறகு பேட்டிங் செய்த இடத்திற்கு ஓடினார். இந்த நிலையில் ஜோர்டன் நேரடியாக ஸ்டெம்பை அடிக்க முயற்சி செய்தார். எனினும் ஸ்டெம்பில் படவில்லை. ஸ்டெம்பில் படாமல்வந்த பந்தை கீப்பர் டோனி ஓடி வந்து டைவ் அடித்து ரன் அவுட் செய்தார். அவ்வாறு ரன் அவுட் செய்தது தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ரன் அவுட்டை நினைவுப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. சென்ற 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜாண்டி ரோட்ஸ், இன்சமாமை அவுட் செய்வார். அவர் காற்றில் பறந்தபடி அந்த ரன் அவுட்டை செய்தார். இதனால் அன்று முதல் இன்று வரையிலும் அந்த ரன் அவுட் பேசப்படுகிறது.