Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 குவாலிபயர் 1 : இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் ….? சிஎஸ்கே VS டெல்லி இன்று மோதல் …..!!!

2021 சீசன் ஐபில் தொடரில்  குவாலிபயர்  1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் குவாலிபயர்  1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 14 போட்டிகளில் விளையாடி உள்ள  சிஎஸ்கே  அணி 9 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது .குறிப்பாக கடைசியாக ராஜஸ்தான் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டங்களில் சிஎஸ்கே  அணி தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வர ஒருங்கிணைந்த பேட்டிங்  அவசியமாகும். மேலும் அணியில் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் – பாப் டு பிளிஸ்சிஸ் ஜோடி  சிறப்பான தொடக்கத்தை தருகிறார்கள்.

ஆனால் மிடில் ஆர்டர் வரிசையில் மொயீன் அலி ,சுரேஷ் ரெய்னா கேப்டன் டோனி ஆகியோரின் பேட்டிங் பெரும்பாலும் சறுக்கி விடுகிறது .அதேபோல் பந்து வீச்சிலும் பிராவோ, ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாக  செய்யப்படுகின்றன. அதேசமயம் நடப்பு சீசனில் நடந்த 2 லீக் சுற்று ஆட்டங்களில் டெல்லி அணியிடம், சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது .இதனால் இன்றைய போட்டியில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் கால் பதிக்கும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ்  அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 10 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது .அதேசமயம் நடப்பு சீசனில் சிஎஸ்கே உடனான லீக் சுற்று ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.இதனால் அதே நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அதோடு கடந்த ஆண்டு முதல்முறையாக இறுதிப்போட்டி வரை சென்று டெல்லி அணி தோல்வி அடைந்து . இதனால் இந்த சீசனில்  கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.

Categories

Tech |