2021 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே -டெல்லி அணிகள் மோதுகின்றன.
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதனிடையே நடப்பு சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்குள் சென்னை மற்றும் டெல்லி அணிகள் தகுதி பெற்றுள்ளது.அதுமட்டுமில்லாது புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்தையும் , டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக நடப்பு சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.
உத்தேச அணி:
டெல்லி அணி : பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்) , ஹெட்மயர், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.
சென்னை அணி :ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளெசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா/ ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தோனி(கேப்டன்), ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.