14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே ,இந்த சீசனில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகிறது .அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் பாதி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் , இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடி வருகிறது .இதனால் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது .
அதேசமயம் இன்றைய போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .குறிப்பாக சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து அணி நிர்வாகம் முழுவதுமாக விளக்கப்படவில்லை .இதனிடையே குவாலிபயர் 1 ஆட்டத்தில் ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடியதால் இன்றைய போட்டியில் ரெய்னாவுக்கு பதிலாக உத்தப்பா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது .அதேசமயம் கொல்கத்தா அணியில் காயத்திலிருந்து மீண்டுள்ள அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் அணியில் இடம் பெறுவார் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.