Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 FINAL :சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் ….? சிஎஸ்கே VS கொல்கத்தா இன்று மோதல் ….!!!

14-வது சீசன்  ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரம்மாண்டமான இறுதிப்போட்டியில் சிஎஸ்கே – கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு சீசனில் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி , கொல்கத்தாவை  இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை பவுலிங்கில் மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது .அந்த அணியில் சுனில் நரைன் ,வருண் சக்கரவர்த்தி ஆகியோர்   மிரட்டி வருகின்றனர் .அதேபோல் பேட்டிங்கிலும் தொடக்க வீரரான வெங்கடேஷ்  ஐயர் ,சுப்மன் கில் ஆகிய இருவரின் பார்ம் அசுரபலமாக உள்ளது.

அதேபோல் சிஎஸ்கே அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் சிறப்பாக விளங்குகிறது .தொடக்க வீரர்களாக ருதுராஜ் , டு ப்ளஸிஸ் சிறப்பாக விளையாடி வருகின்றனர் .அதேபோல் மிடில் ஆர்டரில் ராபின் உத்தப்பா ,அம்பத்தி ராயுடு, மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பு கூடுதல் பலமாக உள்ளது. இதையடுத்து பவுலிங்கில் ஹேசல் வுட், ஷர்தூல்,பிராவோ ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றன .இதனிடையே டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி விளையாடும் 9-வது ஐபிஎல் இறுதிப் போட்டி இதுவாகும்.

அதேபோல் கொல்கத்தா அணிக்கு இது 3-வது இறுதி போட்டி ஆகும். அதேசமயம் கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து ஒருமுறை கூட தோல்வியடைந்தது இல்லை. இதனிடையே சிஎஸ்கே அணி 3 முறை சாம்பியன் பட்டத்தையும் ,கொல்கத்தா அணி 2 முறையும் வென்றுள்ளது. எனவே இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்திய நேரப்படி இப்போட்டியின் இன்று இரவு7.30 துபாயில் தொடங்குகிறது.

Categories

Tech |