ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரஷீத் கான், முகமது நபி இருவரும் அணியில் இணைந்தனர் .
14-வது சீசன் ஐபில் தொடரின் 2-வது பாதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கான் வீரராக ரஷீத் கான், முகமது நபி இருவரும் நேற்று அமீரகம் வந்தடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர் .இதற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியை அறிவிக்கும்போது தன்னுடைய கருத்தை கேட்காமல் அணியை தேர்வு செய்வதால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ரஷீத் கான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது .