Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : டெல்லி அணியை பழிதீர்க்குமா சிஎஸ்கே ….? உத்தேச அணி இதுதான் ….!!!

14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் லீக்  சுற்றுகள் முடிவடைந்த நிலையில் ,ப்ளே ஆப் சுற்றுக்கு டெல்லி ,சென்னை பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன .அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிபயர் 1 ஆட்டத்தில்  புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ்  அணியும், 2-வது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ,என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் என தெரிகிறது .அதேசமயம் தோல்வியடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு  2-வது குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும்.

ஆனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்  முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .அதே சமயம் நடப்பு சீசன் தொடக்கத்தில்  இருந்தே இரு அணிகளும் சம பலத்துடன் இருக்கின்றன. இதனிடையே இன்றைய போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் முதல் பாதி ஆட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த இரு அணிகளும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் சற்று சரிவைக் கண்டுள்ளது.இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கும் வீரர்கள் யார்  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் :

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), ரிபால் படேல், ஷிம்ரான் ஹெட்மையர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜே.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

Categories

Tech |