டெல்லி அணியின் அஸ்வினுக்கு பதிலாக, இஷாந்த் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.
அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் 22வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ,டெல்லி அணி இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அஸ்வின், தனது குடும்ப சூழல் காரணமா, ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகினார். அஸ்வின் விலகியதால் டெல்லி அணியின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு பதில் எந்த வீரர் களமிறங்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன் படி அஸ்வினுக்கு பதிலாக சீனியர் வீரரான இஷாந்த் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட உள்ளார். தொடக்கத்திலிருந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்த, இஷாந்த் சர்மாவிற்கு ,அஸ்வினின் விலகலால் இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.