Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அமீரகம் பறக்கவுள்ள சிஎஸ்கே …. வெளியான மாஸ்அப்டேட் ….!!!

மீதமுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக  சிஎஸ்கே வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட உள்ளனர் .

14-வது சீசன் ஐபிஎல் போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 -ஆம் தேதி முதல்  தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணி  வீரர்கள் டெஸ்ட்  தொடர் முடிந்ததும்  அங்கிருந்து  ஐக்கிய அரபு அமீரகதிற்கு சென்றுவிடுவார்கள்.

இதற்காக 8 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ,பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் முன்னதாகவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றால்தான் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி அவர்கள் மாற்றிக்கொண்டு சிறப்பாக விளையாட முடியும். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நாளை மறுதினம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |