Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 7-வது வெற்றி பெறுமா பெங்களூர் ….? ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் ,அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 4 தோல்வி, 6 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது .அதேபோல் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 4 தோல்வி, 6 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

இதில் நடப்பு சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூர்  அணி அபார வெற்றி பெற்றது .இதனால் இன்றைய போட்டியிலும் அதே நம்பிக்கையுடன் பெங்களூர் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தொடர் தோல்வியை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணியின் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது

Categories

Tech |