ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2-வது பாதி ஆட்டத்திலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் விலகியுள்ளனர் .
14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இதற்காக அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பாக ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் விலகிய நிலையில் தற்போது மேலும் 3 வீரர்கள் தொடரில் இருந்து விலகி இருப்பது சம்மந்தப்பட்ட அணிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.