Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

IPL 2020 : ரசிகர்களை ஈர்த்த ஹாட்ஸ்டார்…… 1 மாதத்தில் ரூ2,00,00,000 லாபம்…!!

இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியால் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்க உள்ள வருமானம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருவதால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை, மைதானங்களில் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை பார்வையாளர்களை வைத்து பார்ப்பதற்கு அனுமதி கிடையாது.

முதற்கட்டமாக, போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஐபிஎல் 2020 காண சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே இந்திய ரசிகர்கள் யாரும் இதனை காண முடியாததால், இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார்-இல் ஆங்கிலம், தமிழ், மலையாளம், உள்ளிட்ட ஆறு மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இதன்மூலம் நிறுவனத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கும் மேல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories

Tech |