கிரிக்கெட் வீரர் ராய் விலகியதையடுத்து ரெய்னாவை குஜராத் டைட்டன்ஸ் ஒரு வருடத்திற்கு அணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் வைத்து ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் எந்த அணியுமே சுரேஷ் ரெய்னாவை வாங்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து பயோ பபுலின் அழுத்தத்தைக் காரணம் காட்டி ஜேசன் ராய் விலகியுள்ளார். இவரின் விலகலால் குஜராத் டைட்டன்ஸ் ஒரு வருடத்திற்கு சுரேஷ் ரெய்னாவை அணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஜேசன் ராயை போல் சுரேஷ் ரெய்னாவை ஓபனராக களமிறக்காமல் மிடில் வரிசையில் மிகவும் ஈஸியாக விளையாட வைக்கலாம் என்ற திட்டத்தை முன்வைத்து அந்த அணி அவரை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.