கிரிக்கெட் வீரரான தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
ஐபிஎல் 14 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பங்கேற்றுள்ளார். தற்போது இவர் மும்பையில் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசனில் விளையாடிய பிறகு தோனி எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
அவரின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். பிறகு தற்போதுதான் 14 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்பதற்காக மருத்துவர்களின் பாதுகாப்பு வட்டாரத்தில் சேர்ந்துள்ளார். இவருடன் சேர்த்து 8 கிரிக்கெட் வீரர்களும் மருத்துவ பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களுக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவும், நாடித்துடிப்பின் அளவும் சரியான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.