Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL மெகா ஏலம்”…. “ஷிகர் தவானை” தட்டி தூக்கிய “பஞ்சாப் அணி”…. எத்தன கோடிக்குனு தெரியுமா?…!!

ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு இந்திய அணியின் வீரரான ஷிகர் தவானை எடுத்துள்ளது.

ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், கம்மின்ஸ் டிகாக், தவான், ரபாடா, ஷ்ரேயஸ், ஷமி, வார்னர், டுமிளொசிஸ் ஆகியோர் ஏலம் விடப்பட்டுள்ளார்கள். அதில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு இந்திய அணியின் ஷிகர் தவானை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஐபில் ஏலத்திலேயே பஞ்சாப் அணி தான் ஒரு வீரருக்கே அதிக செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |