15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நேரில் பார்ப்பதற்காக வங்கதேசம் ரசிகர் ஒருவர் எல்லை தாண்டி பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளார். இப்ராஹிம் (31)என்பவரை ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காக வங்கதேசத்தில் உள்ள தரகர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வங்கதேச எல்லையில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்து உள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பர்கனஸ் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தபோது அதிகாரிகள் அவரை பிடித்துள்ளனர். இதையடுத்து விசாரணை செய்து அதன் பிறகு வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
Categories
IPL போட்டியை நேரில் காண…. எல்லை தாண்டிய ரசிகர்…. பெரும் பரபரப்பு….!!!!
