Categories
உலக செய்திகள்

ரொம்ப தப்பு… சார்ஜர் இல்லாம போன் மட்டும் எப்படி விற்கலாம்…? ஆப்பிள் நிறுவனத்திற்கு 2,000,000 டாலர் அபராதம் விதித்த பிரேசில்…!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற தொடரில்  சார்ஜர்களை வழங்காததற்காக பிரேசில் நாட்டின் நுகர்வோர் கண்காணிப்புக்குழு அந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.

அந்த அபராதம் எவ்வளவு தெரியுமா 2 மில்லியன் டாலர். ஆப்பிள் நிறுவனம் தவறான விளம்பரங்களில் ஈடுபட்டது என்றும் சார்ஜர் இல்லாமல் ஒரு ஐபோனை விற்றது என்றும் நுகர்வோர் கண்காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பிரேசிலில் உறுதியான நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கிறது என்பதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போன்று  இந்த சட்டத்தையும் அந்நிறுவனம் மதித்து நடக்க வேண்டும் என்றும் பிரேசில் அரசாங்கத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அக்டோபர் 2020ஆம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் 12 உடன் சார்ஜர்களும் இயர்போன்களும் அனுப்பப்படாது என்று ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது.

மேலும் இந்த அறிவிப்பு எதற்காக என்றால் சுற்றுச்சூழல் கவலைகளை பூர்த்தி செய்வதற்காகத் தான் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் பிரேசில் அரசாங்கம் ஆப்பிள் நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த அபராதத்திற்கு ஆப்பிள் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |