அமேசான், flipkart உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் முன்னிட்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில் பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில் அமேசான் நிறுவனம் பல்வேறு சலுகைகளை தந்து வருகிறது.
இந்த நிலையில் IPhone 64 ஜிபி செல்போனை 27% டிஸ்கவுண்ட் செய்து ரூ. 65,900லிருந்து ரூ. 47,999க்கு விற்பனை செய்கிறது. தொடர்ந்து, சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி செல்போனை 36% சலுகையில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் 1,61,998 ரூபாய் மதிப்புள்ள இந்த செல்போனை 1,02,998 ரூபாய்க்கு வாங்கலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.