Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“லாட்டரி அதிபருக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை” வருமானவரி துறை அதிரடி…!!

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகின்றார். இவரை லாட்டரி கிங் மற்றும் லாட்டரி மார்ட்டின் என்று அழைப்பர். இவருக்கு சென்னை , இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான இடங்களில் வாருமான வரித்துறையினர் தீவிர  நடத்தினர். கோயம்புத்தூர், சென்னை மற்றும் கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்பட நாடு முழுவதும் என 70 இடங்களில் நடைபெற்ற சோதனையில்  கைப்பற்றப்பட்டதாக தெரிகின்றது.

இதுகுறித்து வருமானவரி  அதிகாரிகள் கூறுகையில் , கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டின், கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பதாக எங்களுக்கு கிடைத்த  ரகசிய தகவலின் அடிப்படையில்  அவரது அலுவலகம் மற்றும் வீடுகளை தீவிரமாக கண்காணித்தோம். இதையடுத்து அவருக்கு சொந்தமான சுமார் 70 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அவரது தொழில் சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த  ஆவணங்களின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |