Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(13.06.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

13-06-2020, வைகாசி 31, சனிக்கிழமை.

இராகு காலம் – காலை 09.00-10.30

எம கண்டம் மதியம் 01.30-03.00

குளிகன் காலை 06.00-07.30.

இன்றைய ராசிப்பலன் –  13.06.2020

மேஷம்

இன்று அனைத்து செயல்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.

ரிஷபம்

பெரிய மனிதர்களின் சந்தித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். நவீனப் பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

ஆரோக்கியம் தொடர்பாக மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பணி உயர்வு உண்டு. பணப்பற்றாக்குறையால் குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

எடுத்த காரியத்தை முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் இருந்த இறுதிநிலை படிப்படியாக குறையும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

கன்னி

பிள்ளைகள் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வகையில் நன்மை உண்டு. எதிர்பாராத பணவரவு ,பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

துலாம்

குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். வெளியில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் உண்டு. நண்பர்கலால் நன்மை உண்டாகும். தொழிலில் இருந்த நிலை மாறி முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்

வியாபாரத்தில் நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுப முயற்சிகளில் நன்மை உண்டு.

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழிலில் தொடர்பான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டு.

கும்பம்

தொழிலில்  தொடர்பாக நெருக்கடிகள் உண்டாகும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் வெற்றியை கொடுக்கும்.

மீனம்

உடல்நிலையில் சோர்வும், மந்தமும் காணப்படும். குடும்ப பிரச்சினைகள் ஓரளவு நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும்.

Categories

Tech |