செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்படும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய இருக்கிறார்.
தொடர் மழை காரணமாக சென்னை செம்மரபாக்கம் ஏரியில் 1000 கன அடி நீரானது திறந்து விடப்படுள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்க கூடிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
ஆயிரம் கன அடி நீர் என்பது மிக குறைந்த அளவாக இருந்தாலும், அது போகக்கூடிய வழித்தடங்களில் எவ்வாறு பிரச்சினை ஏற்படும் ? என்பது தொடர்பான ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். செம்பரபக்கம் ஏரி நல்ல பலமாக இருக்கின்றதா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.