இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனியார் மயமாக்க படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தனியார் மயமாக்க உள்ளதாக நெடுநாட்களாக கருத்து நிலவுகிறது. இது இந்திய அரசின் பொருளாதார சுமையை குறைக்கும் என்றும் அது விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு புதிய பாய்ச்சலுக்கு வழி வகுக்கும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது மற்றொரு தரப்பு விண்வெளி ஆராய்ச்சி முதலானவை அனைத்து மக்களுக்காக எடுக்க வேண்டும் என்றும் தனியார்மயம் ஆனால் அது அந்தந்த நிறுவனங்கலின் நலன்களுக்கான ஆராய்ச்சியாக மாறிவிடும் என்றும் வாதிடுவார்கள் .
இப்படி பல்வேறுவாத பிரிவிதுவாக தொடர்கதையாகின்றன. விண்வெளித்துறையில் இந்தியாவில் திறன்களை வெளிக்கொண்டு வருவது குறித்து இன்றைய இணையவழி கருதரங்கில் இஸ்ரோ சிவன் பங்கேற்று பேசினார். அப்போது விண்வெளித் துறையில் அரசு சீர்திருத்தங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் . தனியார்மயம் சார்ந்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இஸ்ரோ தனியார் மயமாக்கப்பட்டு உள்ளதாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் இஸ்ரோ தனியார் மயம் ஆகாது என்றும் அவர் கூறியுள்ளார்.