இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் இங்கிலாந்து பயணத்தை முடித்த பின்பு இத்தாலி சென்றுள்ளார். இதனையடுத்து அவர் இத்தாலியின் முப்படை தளபதி மற்றும் ராணுவ தளபதியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையே பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதே ஆகும். மேலும் காசினோ நகரில் இருக்கும் இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவுச் சின்னத்தை இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே திறந்து வைத்துள்ளார்.