பாகுபலியில் நடித்த பிரபாஸ் 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். தெலுங்கில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ 70 கோடி சம்பளமாகவும், 30 கோடி பிற மொழிகளில் டப்பிங் செய்வதற்கான உரிமைக்கும் பெறுகிறார். நடிகை தீபிகா படுகோனே இப்படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை கதையான “நடிகையர் திலகம்” எனும் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார்.
நடிகர் பிரபாஸின் சம்பளம் 100 கோடியாக உயர்ந்து இருப்பது சக நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் மார்க்கெட் உள்ள இந்தி படங்களில் நடிக்கும் முன்னணி கதாநாயகர்கள் கூட இவ்வளவு சம்பளம் வாங்கவில்லை என்கின்றனர். பிரபாஸின் முந்தைய படமான “சகோ”160 கோடி மொத்த பட்ஜெட்டில் இருந்து 70 கோடி சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டது. “சகோ” படத்தை தமிழிலும் வெளியிட்டனர். ஆந்திராவில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பிரபாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததால் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிரபாஸ் பெற்றுள்ளார்.