Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த வெற்றி இவர்களுக்கு உரித்தானது. “….! தமிழக வீரர்களுக்கு தினேஷ் கார்த்திக் புகழாரம் ….!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த  இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களான ஷாருக் கான் , சாய் கிஷோர் ஆகிய இருவரையும்  தினேஷ் கார்த்திக் புகழ்ந்து கூறியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நேற்று டெல்லியில் நடந்த  இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீச்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது .தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி விளையாடியது .இதில்  இறுதிக்கட்டத்தில் கடைசி 4 ஓவரில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களமிறங்கிய ஷாருக்கான் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். குறிப்பாக கடைசி பந்தில் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது .அப்போது ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அப்போது ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு அடித்து விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இந்நிலையில் சென்ற வருடம் சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணி கோப்பையை வென்ற போது அப்போது கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவில்,’ இறுதிச்சுற்று இரு தமிழக வீரர்களுக்கு உரித்தானது. பந்தில் சாய் கிஷோர் மற்றும் பேட்டிங்கில் ஷாருக்கான். தமிழக அணி இறுதியில் ஜெயிக்கும் போது இரு வீரர்களும் ஆடுகளத்தில் இருந்தது பொருத்தமானது. அதோடு இந்திய அணியின் கதவை இருவரும் பலமாக தட்டுகிறார்கள்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |