தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர்ஜ இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியே பெற்று உள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் அதிகமான விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிஜமான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது. தாய்லாந்து, வட இந்தியா, ஆந்திரா, சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. படத்தை பற்றி பாராட்டி பேசும் அனைவரும் குறிப்பிடும் ஒரு தொழில்நுட்பம் விஷயம் ஒளிப்பதிவு தான். அதனைத் தொடர்ந்து தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல வெற்றி படங்களுக்கு முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவு பற்றி ரவிவர்மன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு நன்றி பதிவை பதிவிட்டுள்ளார். அதில், பொன்னியின் செல்வன் போன்ற ஒரு மாபெரும் படத்தில் நான் ஒரு பங்காக இருந்தது குறித்து உண்மையில் பெருமையும் மரியாதையும் அடைகிறேன்.
இந்த படம் எனது திரைப்படம் படமாக்கலில் ஒரு புதிய பாதையை திறந்து வைத்துள்ளது. எனது பெருமைமிகு படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. இந்த அற்புதமான நீண்ட காட்சிப் பயணம் கலரிஸ்ட், உதவி ஒளிப்பதிவாளர்கள், கேமரா குழுவினர், போகஸ் புல்லர், ஜிம்மி ஜிப் குழுவினர், ஸ்டெடிகேம் குழுவினர், பாந்தர் குழுவினர், டிரோன் குழுவினர் மற்றும் அனைத்து லைட்டிங் குழு உறுப்பினார்களாலும் அவர்களது மிகச் சிறந்த ஈடுபாட்டாலும் என்னால் ஒரு சிறந்த பணியை செய்து முடிக்கக் காரணமாக அமைந்தது. அவர்கள் இல்லாமல் இது நடந்திருக்காது. ‘பொன்னியின் செல்வன் 1’ பெறும் வெற்றி பெற்றுள்ளது. சிறந்த நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அவர்களது சிறந்தவற்றை ஒன்றிணைந்து, மணிரத்னம் தலைமையில் வழங்கியதே இந்த காட்சித் தோற்றம் உருவாகக் காரணம். பலரது கனவுகளை அவர் நனவாக்கினார். வெள்ளித் திரையில் இப்படி ஒரு காவியத்தை உயிர்ப்புடன் கொண்டு வரும் திறமை மிக்கவர். பல தடங்கல்களுடன் இது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. இருப்பினும் அவை தீர்க்கப்பட்டு பல பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் முடிந்தது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.