வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து காலத்தில் நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறைந்த வாக்கு வித்தியாசம் மட்டுமே இருவருக்கும் நடுவில் இருக்கும் பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பான சூழல் அரசியல் களத்தில் நிலவி வருகிறது.
இந்நிலையில் புதிதாக தோன்றி களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாம் தமிழர் கட்சியை மக்கள் ஏற்பதும் ஏற்காததும் மக்களுடைய விருப்பம் ஆனால் தொடர்ந்து களத்தில் நிற்க வேண்டியது எங்களுடைய கடமை என்று தெரிவித்துள்ளார்.