Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கடைமடை வரை காவேரி” போர்க்கால முறையில் தூர்வாரும் பணி… அமைச்சர் பேட்டி..!!

புதுக்கோட்டை கடைமடை பகுதி வரை காவேரி நீரை கொண்டுவர  தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை பூமி பூஜை நடத்தி பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,காவிரி கடைமடை பகுதிகளில் ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 

Image result for minister vijayabaskar

இதனால் கடைமடை பகுதி வரை காவிரி நீர் வந்து சேரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சியில் குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், மேலும் செயல்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Categories

Tech |