அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று டெல்லியில் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இதில் பங்கேற்ற பின் செய்தியாளரை சந்தித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் , 69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தின் கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கனிவுடன் கேட்டார். குடிநீர் பிரச்சினையை அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டத்தை அறிவித்து உள்ளது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட திட்டங்களை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் வழங்க கேரள அரசு முன்வந்தது நல்லது என்று அமைச்சர் தெரிவித்தார்.