நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் .
நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதாகவும் , அதில் உள்ள எட்டு கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு நமது விஞ்ஞானிகள் முக்கியத்துவம் கொடுத்து உழைத்து வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.