கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமூகம் அணி திரண்டு இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டுமென தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 35 பேர் பலியாகினர். அதுமட்டுமில்லாமல் 50க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் அமைப்பினர் அனுப்பியதாக ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரு தரப்புகளும் தங்களது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் கேட்டுக்கொண்டது.
இருப்பினும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது. கடந்தவாரம் காசாவில் 14 அடுக்குமாடி கட்டிடத்தை அதி பயங்கர குண்டுவீச்சில் தரைமட்டமாக்கி இருக்கிறது. 17 குழந்தைகள் உள்பட 83 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக சர்வதேச சமூகம் அணிதிரள வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.