உலக நாடுகள் முழுவதும், நவம்பர் 20-ஆம் தேதியான இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் ஒவ்வொரு நாட்டிலும், குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகிறார்கள். எனினும், வருடந்தோறும் நவம்பர் 20ஆம் தேதி அன்று, உலக நாடுகள் முழுக்க சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த 1954 ஆம் வருடத்தில் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று குழந்தைகளிடையே உள்ள சகோதரத்துவத்தையும் புரிதலையும் மேம்படுத்துவதற்காக குழந்தைகள் நலன் கருதி ஐக்கிய நாடுகள் சபையானது, சர்வதேச குழந்தைகள் தினத்தை வருடந்தோறும் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுளை வலியுறுத்தியது.
கடந்த 1959 ஆம் வருடத்தில் குழந்தைகளுக்கான உரிமைகள் பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், 1989-ஆம் வருடத்தில், நவம்பர் மாதம் 20ஆம் தேதி அன்று குழந்தைகளுக்கான உரிமைகளை கோரி மாநாடு நடைபெற்றது. எனவே, அதனை, சர்வதேச குழந்தைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
பாலியல் கொடுமைகள், பாகுபாடு, ஆகிய வன்முறையை எதிர்கொள்ளும் உலகம் முழுக்க இருக்கும் அனைத்து குழந்தைகளை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும், வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகளை மீட்கவும், சர்வதேச குழந்தைகள் தினம் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.